Latestஇந்தியா

அரசியலில் கமல் நடிப்பு எடுபடுமா!

சென்னை, ஏப்.14- டிவியை உடைப்பது போல நடித்து டுவிட்டரில் பிரசாரம் செய்யும் கமலுக்கு ஓட்டுகள் விழுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுகவின் துரைமுருகன் தன்னை விட பெரிய நடிகர் என சான்றிதழ் அளித்த  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தற்போது டுவிட்டர் பிரசாரத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் டிவியை உடைப்பது போல நடித்து, மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசிய கமலின் நடவடிக்கையை பலரும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர். சினிமாவை போலவே அரசியலிலும் கமலின் நடிப்பு எடுபடுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

இன்றும் இரட்டை இலை என்றால் எம்.ஜி.ஆரையும்-உதயசூரியன் என்றால் கருணாநிதியையும் நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடையே கமலின் “டார்ச் லைட்” ஒளி மங்கலாகவே தெரிகிறது. கமல் தன் பிரசாரத்தை பாமர மக்களும் உணரும்படி மாற்ற வேண்டும் என்பதும் அவரது கட்சியினரின் கருத்தாகவும் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker