Latestஉலகம்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் பலர் காயம்

மெல்பெர்ன், ஏப்.14- ஆஸ்திரேலியா, மெல்பெர்ன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மெல்பெர்ன் நகரில் ஜப்பர் ஸ்திரீட் மற்றும் மெவெர்ன் சாலைப்பகுதி அருகே உள்ள இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியில் உள்ளூர் நேரப்படி 3.20 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் விடுதி காவலாளி ஒருவரின் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும்- மற்றொருவருக்கு லேசான  காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதற் கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.

மேலும் மெல்பெர்ன் ஆன்பிரட் மருத்துவமனையில் 28 வயதான நபர் ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படாத மற்றொருவர் ஆபத்தான நிலையில் தங்கள் உயிருக்கு போராடுவதாக கூறப்படுகிறது. 29 மற்றும் 50 வயதுடைய இருவர் காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் பலர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விக்டோரியா போலிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் நடந்தததிலிருந்து அப்பகுதியில் நிலை குறித்து போலிசார் எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் சில உள்ளூர் ஊடகங்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன. திருடப்பட்ட போர்ச்சே காரில் வந்தபடியே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்தி வெளியாகிவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker