Latestஉலகம்

குளிக்காத கணவன்: விவாகரத்து கேட்ட மனைவி!

ஓடிசா, ஏப்.14 – தன்னுடைய கணவர் ஒரு வாரத்திற்கும் மேலாக தன்னை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல், ஷேவ் செய்து கொள்ளாமல், குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் சுவாரசியமாக பேசப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியினருக்கு, குழந்தைகள் இல்லை. கணவர் வீட்டின் அருகிலேயே ஒரு கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில்  அவர் சுத்தமாக இல்லாமல் எப்பொழுதும் பார்த்தாலும் அழுக்கு மூட்டையாக தெரிவதால் அருவருப்பாக இருக்கிறது என மனைவி முடிவு செய்துள்ளார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அப்பெண் கேட்பதாக இல்லை. அந்தக் கணவரும் பதிலுக்கு விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் வரும் ஆறு மாதத்திற்கு பிரிந்து இருக்குமாறு நீதிபதி தெரிவித்ததை அடுத்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய கால சூழ்நிலையில் விவாகரத்து கோரி பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இது போன்ற சில காரணங்கள் அனைவரையும் சீர்த் தூக்கி பார்க்கவும் வைக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker