Latestஉலகம்

சூடானில் புதிய அதிபரும் ராஜினாமா: 2 நாட்களில் இரு ஆட்சி மாற்றம்!

கார்டூம், ஏப்.14- சூடானில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தலைமைத் தளபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் கடந்த 2 நாட்களில் இரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சூடான் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பஷிர் வகித்து வந்த ராணுவத்தால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவத் இபின் அல்ப் வியாழக்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் சூடான் ராணுவ  கவுன்சில் அரசியல் விவகாரத் தலைவர் ஓமர் ஜெயின் அன் அபின் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் இது ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மட்டுமே ராணுவம் ஆதரவு அளித்தது என்றார். இது சூடான் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானது. இதைத்த தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து ராணுவ தலைமைத் தளபதி அவத் இபின் ராஜினாமா செய்தார்,

இது குறித்து சூடான் நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்துகையில் ராணுவ கவுன்சில் தலைவர் பதவிலிருந்து ராஜினாமா செய்கிறேன். எனக்குப் பதிலாக அப்பதவிக்கு ஜெனரல் அப்தல் பட்டா அல் பர்கான் அப்துல் ரகுமானை நான் தேர்வு செய்துள்ளேன். ஆட்சிக் கப்பலை பாதுகாப்பான இடத்துக்கு செலுத்துவதற்கு அவருக்கு அனுபவம் மற்றும் தகுதி உதவும் என்று நம்புகிறேன் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker