Latestமலேசியா

டாக்டர் சாஹ்ருடின் ஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்!

ஜொகூர் பாரு, ஏப். 14 –  புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சாஹ்ருடின் ஜொகூரின் 17ஆவது மந்திரி பெசாராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சாஹ்ருடின்(வயது 43) ஜொகூர் சுற்றுச்சூழல், விவசாயத்துறை ஆட்சிக்குவின் தலைவராவார்.

1975ஆம் ஆண்டு மே 26இல் பிறந்த அவர், ஜொகூர் பக்காத்தானின் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்தோனேசியா மக்காசார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் எம்பிபிஸ் பட்டதாரியாவார்.

அரசியலுக்கு நுழையும் முன்னர், அவர் பாகோ புக்கிட் பாசிரில் சொந்த கிளிக்கை நடத்தி வந்துள்ளார்.  அவரின் மனைவி நிலா அர்மிலா முக்டானும் ஒரு மருத்துவராவார். அவர்களுக்கு மூன்று புதல்விகள் உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker