Latestஇந்தியா

நடிகர் ரித்திஷ் மரணம்: இன்று இறுதிச் சடங்கு

ராமநாதபுரம், ஏப் 14 –  நடிகரும்- முன்னாள் எம்.பி.யுமான ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. ஏற்கனவே அவருக்கு இதய  நோய் பிரச்சனை இருந்து ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் உடல் நிலை தேறிய நிலையில் அதிமுகவிற்கு  ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார்.

நேற்று அவர் ராமநாதபுரத்தில் பல பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் உணவருந்தி  ஓய்வெடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உனடியாக அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றார்.

வரும் வழியிலே அவரது உயிர் பிரிந்து  விட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் சங்க   நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

நடிகராகவும் -தயாரிப்பாளராகவும்- அரசியல்வாதியாகவும் இருந்த ரித்திஷ், நடிகர் சங்கம் சார்பில் விஷால் அணியில் களமிறங்கிய போது அவரை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்தார்.

இவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும் ஆரிக் ரோஷன் என்ற 11 வயது மகனும் உள்ளனர். ரித்திஷின் உடல் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று 14 ஆம் தேதி நடைபெறும். ஜே.கே. ரித்திஷின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker