Latestமலேசியா

பாக்காத்தானின் மீது வாக்காளர்கள் அதிருப்தி- வீ கா சியோங்!

ரந்தாவ், ஏப்.14 –  ரந்தாவில் முகமட் ஹசானின் வெற்றியானது அவர் அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்பவராகவும் வாக்காளர்கள் பக்காத்தனின் மீது அதிருப்தி அடைந்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும்  மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.

அவருக்குக் கிடைத்த அதிகப்படியான பெரும்பான்மையானது அவரை அனைத்து இனமும் ஏற்றுக்கொண்டுள்ளதை புலப்படுத்துகிறது.

தோக் மாட் என்றழைக்கப்படும் முகமட் ஹசானுக்கு 10,397 வாக்குகளும் டாக்டர் ஶ்ரீ ராமுக்கு 5,887 வாக்குகளும் சுயேச்சைகளான ஆர்.மலர்விழிக்கு 83ம் முகமட் நோர் யாசினுக்கு 79 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இந்த வெற்றியின் மூலம் தேசிய முன்னணியின்  உறுப்புக் கட்சிகள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

மக்கள் பக்காத்தானின் வெற்று வாக்குறுதிகளை இனிமேலும் நம்ப மாட்டார்கள் என்றும் வாழ்க்கைச் சுமையினால் பாதிக்கப்பட்டிருப்போர் பக்காத்தானின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker