Latestமலேசியா

மெர்டேக்கா முகநூல் அகப்பக்கம் – முடக்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஏப். 14 – சபா, சராவாக்கில் செயல்படும் மெர்டேக்கா எனும் முகநூல் அகப்பக்கம் முடக்கப்பட்டதாகப் போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உருவப் படத்தை அவலட்சணமாக மாற்றி வெளியிட்டு நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எண்ணம் இதுவென்றும்,  அந்தப் புகைப்படங்களை வெளியிடுவோருக்கு ரிம. 5,000 அபராதமும் 3 ஆண்டு சிறையும் விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அது சம்பந்தமாக இது வாரை 209 போலீஸ் புகார்கள் கிடைக்கப்பட்டதாகவும் அந்த புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்டவரை போலீஸ் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அம்மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டிருப்பது அரச பாரம்பரியத்தை சிறுமைப்படுத்தவதாகவும்  சட்டத்துக்கு முரணானதாகவும் இருப்பதாக   உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker