Latestஇந்தியா

வரும் ஜூலையில் நடிகர் சங்கத் தேர்தல்!

சென்னை, ஏப் 14- வருகிற 2019 ஜூலை மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்  வெளியாகிவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015 இல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள்  பொறுப்புக்கு வந்தனர். இவர்களில் 3 ஆண்டு பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க  கட்டிடவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் உருவாகி உள்ளது. நடிகர் சங்க அலுவலகம், கருத்தரங்கு  கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.

அடுத்து உள் அலங்கார வேலைபாடுகள் நடக்க உள்ளன. செலவு 30 கோடியை தாண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக மீண்டும் நிதி   திரட்ட நடிகர்- நடிகைகளின் நட்சத்திர கலைவிழாவை நடத்த விரைவில் ஏற்பாடுகள் நடக்கவிருக்கின்றன. வரும் ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker