Latestஉலகம்

30 குழந்தைகள் மரணம் : 50 லட்சம் தொட்டில்கள் பறிமுதல்

நியூ-யார்க், ஏப்.14- அமெரிக்க சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.

அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம். குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.

“ராக் என் பேளே சிலீப்பர்ஸ்” என்று அழைக்கப்படுகிற இந்த நவீன தொட்டிகளின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு காரணம் 2009 ஆம் ஆண்டு இந்த நவீன  தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல் அவற்றில் படுத்து உறங்கிய 30 சின்னஞ்சிறு குழந்தைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன.

இது குறித்து அமெரிக்க நுகர் பொருள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள் அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது திரும்பி படுக்க முயன்று போது இறந்து விட்டது என்பதை அறிந்ததாக அந்த நுகர் பொருள் ஆணையம் ஒப்புக் கொண்டது.

அதையடுத்து சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்க நுகர் பொருள் ஆணையம் உத்தரவிட்டது. இதை பிஷர் பிரைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உண்மைதான் என உறுதி செய்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker