Latestஇந்தியா

அவசரமாக அருண்ஜெட்லி ஏன் இந்தியா திரும்பினார்!

புதுடில்லி, ஏப்.15- தலைக்கு மேல் தேர்தல் பணிகள் இருப்பதால் அமெரிக்காவில் இருக்கும் அருண் ஜெட்லியை உடனே இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைத்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியா திரும்பினார். உலக வங்கியில் அனைத்துலக நிதி அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்- உடல் நிலைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார் அருண் ஜெட்லி.

தேர்தல் சூடு உச்சக்கட்டத்தில் இருப்பதாலும் வேறு கட்சி பணிகள் பற்றி ஆலோசனை நடத்த வேண்டி உள்ளதாலும் அவரை உடனே இந்தியாவுக்கு திரும்புமாறு மோடி கேட்டுக் கொண்டார். ஜெட்லியும் உடனே இந்தியா திரும்பினார். பா.ஜனதாவுக்கும்- ஆர்.எஸ்.எஸ்க்கு இடையே ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வந்தவர் ஜெட்லி. மீண்டும் அது போன்ற வேலைகள் இருப்பதால் அருண்ஜெட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் கட்சியின் கொள்கைகள் பிரதமரின் எண்ண ஓட்டம் போன்றவை பற்றி டிவி விவாதங்களில் விவாதிக்கவும் டில்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பயிற்சி  நடத்து வருகிறது. இவர்களுக்கு பல விஷயங்களை ஜெட்லி கற்றுத்தர வேண்டி உள்ளது.

தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களை கையாளும் பணியும் ஜெட்லிக்கு தரப்பட்டுள்ளது. மோடிக்கு நெருக்கமானவர் அருண்ஜெட்லி. ஏதாவது சட்ட பிரச்சனை என்றால் அவருக்கு உடனுக்குடன் ஆலோசனை வருவது அருண்ஜெட்லி தான். டிவி நாளிதழ்களில் வரும் பா.ஜனதா விளம்பரங்களையும் அவர் தான் கண்காணிக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker