Latestஇந்தியா

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்!

புதுடில்லி, ஏப்.15- மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1,100 பேர் இன்று திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி  வருகின்றனர்.

சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க  முடியவில்லை. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.

கடும் நிதி நெருக்கடியில் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல்  நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வரும்
காலத்தில் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிநந்தரமாக
நிறுத்தி விட்டது. மேலும் வேறு சில காரணங்களுக்காக பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் போதிய பணப்புழக்கம் இல்லாததால் விமானிகள், பொறியாளர்கள்  மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம்
இழுத்தடித்தது.

ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் இன்று ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து விமானங்களை  இயக்காமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker