Latestமலேசியா

இசிஆர்எல் – ரிம. 310 கோடி முன் பணம் திரும்பக் கிடைக்கும் – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஏப். 15 – கிழக்குக்கரை ரயில திட்டத்திற்கு (இசிஆர்எல்)  செலுத்தப்பட்ட முன்பணமான 310 கோடியியிலுருந்து ஒரு பகுதியை சீன குத்தகை நிறுவனம் திருப்பித்தர இணக்கம் தந்துள்ளதாகப் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அதில் ஒரு பகுதியான 50 கோடி ரிங்கிட்டை ஏப்ரல் 12க்குப் பின்னரும் எஞ்சிய 50 கோடி ரிங்கிட்டை ஒரு மாதத்தில் அது திருப்பிக் கொடுக்கும்.

அதன் பின்னர், திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, மற்ற செலவினங்கள் போக மீதத்தை அந்த குத்தகை நிறுவனமான சீனா தொடர்பு நிர்மாணிப்பு நிறுவனம்(சிசிசிசி) திருப்பித் தரும்.

அத்திட்டத்தின் மொத்த செலவினமான 6,550 கோடி ரிங்கிட்டானது தற்போது 2,150 கோடி குறைக்கப்பட்டு 4,400 கோடி ரிங்கிட்டுக்கு மேற் கொள்ளப்படும்.

புதிய வழித்தடத்தில் அது கோத்தா பாருவில் தொடங்கி கோல திரெங்கானு, குவாந்தான், மெந்தாகாப், ஜெலுபு, பாங்கி/காஜாங், புத்ரா ஜெயா பின்னர் போர்ட் கிள்ளானுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மகாதீர் மேலும் கூறுகையில், இசிஆர் எல்லின் புதிய ஒப்பந்தத்தில் சீனாவுக்கு செம்பனை எண்ணெய் விற்பது பற்றி குறிப்பிடப்பட்டு ள்ளதாகவும் ஆனால், ஜோ லோவை திருப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker