Latestஉலகம்

இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டலாம்!

தோக்கியோ, ஏப்.15- பெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பர். இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க புத்தம் புதிய கருவி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து துறைகளிலும்
நிரூபித்தும் வருகின்றனர்.

குழந்தை பிறந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, பெண்களுக்கு மட்டுமே இயற்கை வரம். ஆண்களால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. இதனால் குழந்தைகள் பிறந்தால் தாய், குழந்தையை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்து செல்ல முடியாது. இந்நிலையில், இப்பிரச்சனையை சமாளிக்க ஆண்களும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டலாம் என்கிற பாணியில் கருவி ஒன்றை  ஐப்பான் நிறுவனமொன்று கண்டு பிடித்துள்ளது.

அந்தக் கருவி, பாலை கறந்து அடைத்து வைக்கும் பை போன்ற அமைப்பு கொண்டுள்ளது. மேலும்அக்கருவி பெண்களின் மார்பு காம்பு போன்ற அமைப்பு வடிவமைப்பும் பெற்றுள்ளது. இக்கருவியை பொருத்தி கொண்டால் பெண்கள் எப்படி குழந்தைகளுக்கு பாலூட்டுகிறார்களோ
ஆண்களும் அவ்வாறே குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும். இந்த கருவியை தயாரித்த நிறுவனம்  தம்பதியினரின் வேலைப்பளுவை குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது பெண்களின் வேலை என்ற மனநிலையை மாற்றவே நாங்கள் இந்த கருவியை வடிவமைத்துள்ளோம். இந்த தாய்ப்பால் கொடுக்கும் கருவியில் பெண்களின் மார்பு பகுதி போல சிலிக்கான் நிப்பள் பொருத்தப்பட்டுள்ளது.  

மனித உடலை போல வெது வெதுப்பான தன்மையைக் கொண்டதாக இருக்கும். அதனால் குழந்தைகள்  எப்போதும் தாய்ப்பால் குடிப்பதை போன்ற ஒருவித  உணர்வைக் கொண்டிருக்கும் என கூறியுள்ளது அந்நிறுவனம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker