Latestமலேசியா

எஸ்ஆர்சி முறைகேடு – நஜிப்பின் தரப்பு 3 ஆவணங்களைக் கோருகிறது.

கோலாலம்பூர், ஏப். 15 –  எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேட்டு வழக்கில் நஜிப் ரசாக்கின் தரப்பு 3 புதிய ஆவணங்களைக் கோரியுள்ளது.

இவ்வழக்கு இன்று தொடங்கிய வேளையில் நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்வின்டர்ஜிட் சிங், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 ஆவணங்களைத்  தங்களுக்குத் தர வேண்டுமென  கோரியிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அரசினால்  நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் டத்தோ வி.சிதம்பரம்,  அந்தக் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கிற்கு தேவையா என நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அந்த வழக்கில் முதல் சாட்சியான மலேசியா நிறுவனங்களின் ஆணைத்தின் (எஸ்எஸ்எம்) தலைவர் முகமட் அக்மலுடின் அப்துல்லாவை விசாரிப்பதாக இருந்தது.

இரு பக்க விவாதங்களை செவிமடுத்திய நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி,  அந்த ஆவணங்களைப் பிரதிவாதிக்குக் கொடுப்பதற்கு முன்னர் இரு சாராரும் அவற்றைப் பரிசீலித்து தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker