Latestஇந்தியா

ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகைக்குத் தடை!

மும்பை, ஏப்.15- ஐபிஎல் கிரிக்கெட் அணியை வாங்கிய பிரீத்தி ஜிந்தா பயணம் செய்ய கே.ஆர் விமானம் மறுக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் காலம் இது. இது மாநில வாரியாக பல
அணிகள் உள்ளன. அதில் “கிங்ஸ் லெவன்” அணியை வாங்கியவர் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா.

அதே அணியை தொழிலதிபர் நெஸ்வாடியா என்பவரும் வாங்கியிருந்தார். அதன் பின் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் சிலநாட்களுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதே வேளையில் தன் காதலன் மீது பாலியல் குற்றச்சாட்டு  ஒன்றையும் பிரீத்தி ஜிந்தா கூறினார். ஆனாலும் இருவரும் இன்றுவரை அந்த கிங்ஸ் லெவன் அணிக்கு பங்குதாரர்கள் தான்.

அண்மையில் நெஸ்வாடியாவுக்கு சொந்தமான கே.ஆர் விமானத்தில் பயணம் செய்ய பிரீத்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள்  வெளியானது. அந்த மறுப்புக்கு ஆதரவாக பல கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில் கே.ஆர்  நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் பிரீத்தி ஜிந்தா பயணம் செய்ய மறுக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது. அது வதந்தி. எங்கள் விமானத்தில் பயணம் செய்ய அவர் முன்பதிவு  செய்திருந்தது உண்மையே. பயணம் செய்ய வேண்டிய நாள் அன்று அவர் தான் வரவில்லை என பதில் கூறியுள்ளனர். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker