Latestமலேசியா

ஒரே மலேசியா மக்கள் அறக்கட்டளை – நஜிப்தான் இயக்குநர்

கோலாலம்பூர், ஏப். 15 –   ஒரே மலேசியா மக்கள் அறக்கட்டளை 2013 நவம்பர் 11இல் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து நஜிப் ரசாக் அதன் இயக்குநர்களுல் ஒருவராக இருந்து வருவதாக நிறுவன துணைப் பதிவதிகாரி முகமட் அக்மலுடின் அப்துல்லா தெரிவித்தார்.

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேட்டு வழக்கில் அரசுத் தரப்பின் முதல் சாட்சியாக முகமட் அக்மலுடின் சாட்சியமளித் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி 2011 ஜூலை 7இல் பதிவு செய்யப்பட்டபோது, அதன் பங்குகள்   1எம்டிபியின் கட்டுப்பாட்டில் இல்லை.  மேலும் 1எம்டிபி எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் எஸ் ஆர்சிக்கு சொந்தமானவை அல்லவென்றும் அவர் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் நடந்த  எஸ் ஆர்சியின் வாரியக் கூட்டத்தில்  அதன் 999,998 பங்குகளை 1எம்டிபி எனர்ஜி நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

வழக்கின் இரண்டாவது சாட்சியான பேங்க் நெகாராவின் நிர்வாகி அஸிஸுல் அட்ஸானி அப்துல் கபார், 2015ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, ஜாலான் ராஜா சூலானில் உள்ள ஆம்பேங்கில் உள்ள நஜிப்பிற்குச் சொந்தமான கணக்கு விவரங்களைப் பதிவு செய்ததாகத் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

எஸ்ஆர்சியின் 3 கணக்குகளையும்  மற்றும்  கான்டிங்கான் மெந்தாரி நிறுவனத்தின் ஒரு கணக்கில் உள்ள தகவல்களைத் தாம் பதிவு செய்த பின்னர், அவற்றை மேலும் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
66 வயதான நஜிப், எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் நிதிக் கையாடல் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 3 நம்பிக்கை மோசடி, ஒரு அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் 3 பண முறைகேட்டு வழக்குகளை அவர் எதிர்கொள்கிறார்

அக்குற்றங்களை அவர், 2011 ஆகஸ்டு 17இல் இருந்து 2015 பிப்ரவரி 10 வரை ஜாலான் ராஜா சூலான், ஆம் இஸ்லாமிக் வங்கியில் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலியின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker