மலேசியா

காணாமல் போன தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் !

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15 – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்று திரும்பியப் பின் நேற்றிரவிலிருந்து காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட இரு தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர்.

திவ்யா, நட்சத்திரா எனும் அந்த இரு தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகக் கூறிய பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் மொஹமட் சானி செ டின் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டப் பின்னர் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறினார்.

வாக்குமூலம் பெறப்பட்டப் பின்னரே அவர்கள் எப்படி காணாமல் போகினர் என்ற விபரமும் தெரிய வரும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜாலான் காசிங் இண்டா, மெக்ஸ்வெல் டவர் அடுக்குமாடி வளாகத்தின் முன் அவர்கள் நேற்றிரவு காணாமல் போனதாக இதற்கு முன் புகார் செய்யப்பட்டு இன்று அவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker