Latestஇந்தியா

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரேமலதா நடித்திருக்கலாம்!

சென்னை, ஏப்.15- சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக பிரேமலாதா நடித்திருக்கலாம் என அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள்  தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தமிழன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக துணைப்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன் டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராகுல்  காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்யப்படுகின்றது. மோடி ஆட்சிக்கு வரவாய்ப்பே இல்லை என  திட்டவட்டமாக தெரிவித்தார்.

நேற்று வரை ஜெயலலிதாவை எதிரியாக நினைத்த பிரேமலதா, இப்போது தன்னை ஜெயலலிதாவாக மக்கள் பாவிக்க நினைத்து விட்டார்கள்  என பெருமையாக பேசி வருவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரேமலதா
நடித்திருந்தால் இன்னும் சூப்பராக தியேட்டர்களில் ஓடியிருக்கும் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker