Latestமலேசியா

ஜொகூர் மந்திரி பெசாராகப் பதவியைத் தொடங்கினார் சாஹ்ருடின் !

இஸ்கண்டார் புத்ரி, ஏப். 15 –  ஜொகூர் சட்டமன்றத்துத்துக்குப் புதியவரான டாக்டர் சாஹ்ருடின் ஜமால் கோத்தா இஸ்கண்டாரில் இன்று புதிய ஜொகூர் மந்திரி பெசார் பதவியைத் தொடங்கினார்.

புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினரான அவர் மந்திரி பெசார் அலுவலம் அமைந்திருக்கும் டத்தோ ஜாபார் முகமட் கட்டடத்திற்கு சரியாகக் காலை 9 மணிக்கு வந்தார்.

அவரை ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர் மற்றும் இலாகாக்களின் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

இதனிடையே முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஓஸ்மான் சாப்பியான் டாக்டர் சாஹ்ருடினிடம் தமது பதவியை அதிகாரப்பூர்வமாக  ஒப்படைத்தார்.

கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான ஓஸ்மான் ஏப்ரல் 8இல் தமது பதவி துறப்புக் கடிதத்தை பிரதமர் துன் மகாதீரிடம் ஒப்படைத்தார்.

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல் மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் டாக்டர் சாஹ்ருடினை (வயது 43) ஜொகூரின் 17ஆவது மந்திரி பெசாராக நியமித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker