Latestஇந்தியா

தமிழ் பிக்பாஸ்-3க்கு கமல் கேட்ட சம்பளம்-அதிர்ச்சியில் நிறுவனம்!

சென்னை, ஏப் 15- பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களாக ஒளிபரப்பப்பட்டது. இதில் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வந்தார். அவருக்காக பலரும் பாக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.

தற்போது மூன்றாவது சீசனுக்கான பேச்சு வார்த்தையில் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் மும்முரமாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இதில் ஒரு சில நடிகைகளின் பெயர்கள் கூட வெளியானது. ஆனால் அதைப்பற்றி இன்னும் உறுதியான தகவல் வெளியாகாத நிலையில்  இப்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. போட்டியாளர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனால் தொகுப்பாளராக இருக்கும்  கமல் மட்டும் எப்போதும் மாறக்கூடாது என்ற கோரிக்கை அப்போதிலிருந்தே போட்டியை நடத்தும் பிக்பாஸ் குழு மற்றும் விஜய் டிவிக்கு சென்று கொண்டிருக்கிறது.

அது மட்டுமின்றி கமலும் இரண்டு சீசன்களை நன்றாக கொண்டு சென்றதால் மூன்றாவது சீசனினும் அவரை தொகுப்பாளாராக போட பிக்பாஸ்  நிகழ்ச்சி நடத்தும் எண்டிமால் நிறுவனம் அவரை நெருங்கிய போது, அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு எண்டிமால் அதிர்ச்சியடைந்துள்ளதாக  கூறப்படுகிறது.

கமல் ஒரு எபிசோட்டுக்கு ஒரு கோடி வீதம் 100 நாட்களுக்கு 100 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம். அதனால் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளது பிக்பாஸ் குழு. கமலை தொகுப்பாளராக போடாலாமா இல்லை வேறு நடிகரை கொண்டு நடத்தலாமா என்று  யோசித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker