Latestஉலகம்

திக் டோக் காணொளி – நண்பரை சுட்டுத் தள்ளிய ஆடவன் !

டெல்லி, ஏப்ரல் 15 – துப்பாக்கியைக் கொண்டு திக் டோக் காணொளியை எடுக்க முயன்றபோது, தெரியாமல் தனது நண்பனைச் சுட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் குழுவினர் இந்திய கேட்-டிற்கு சென்றனர். வரும் வழியில், துப்பாக்கியுடன் காணொளி ஒன்றை பதிவு செய்ய நினைத்து, வாகனத்தை ஓட்டி வந்த சல்மானை நோக்கி துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கின்றான் சோகைல். தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில், சல்மானின் வலது கன்னத்தில் தோட்டா பாய்ந்தது.

இச்சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர்கள் உடனடியாக சொகைலின் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று ரத்தம் பதிந்த உடையை மாற்றியப் பிறகு சல்மானை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். சல்மானை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  சல்மானை மருத்துவமனையில் அனுமதித்தப் பிறகு உடனே அவர்கள் அங்கிருந்து வெளியாகியுள்ளனர்.

இரவு மணி 11.15 மணியளவில் மருத்துவமனை தரப்பினர் போலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சொகைல் மீது துப்பாக்கி பயன்படுத்தியதன் பேரில் குற்றமும், அமிர் எனும் மற்றொரு நண்பன் மீது கொலைக்கான ஆயுதத்தை மறைக்க முயன்றதன் பேரிலும், ஷரிவ் எனும் ஆடவனை ரத்தம் பதிந்த ஆடைகளை மறைக்க முயன்றதன் பேரிலும் கைது செய்யப்பட்டனர் என பாராக்கம்பா போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker