Latestமலேசியா

தீயணைப்பு வீரர்கள் மூழ்கியது – கவனக் குறைவினால் அல்ல – சுரைடா

கோலாலம்பூர், ஏப். 15 – தாமான் புத்ரா பெர்னாடாவில் பழைய ஈயச்சுரங்க ஏரியில்  தீயணைப்பு வீரர்கள் பணியின்போது மூழ்கி இறந்தது கவனக்குறைவினால் அல்லவென சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

அந்த ஏரியில் விழுந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியின்போது, முகமட் ஃபாத்தா ஹாஷிம், இஸாத்துல் அக்மா வான் இப்ராஹிம், மஸ்லான் ஒமார்பாக்கி, யாஹ்யா அலி, அட்னான் ஓஸ்மான் மற்றும் முகமட் ஹிஃப்சுல் மாலிக் சாரி ஆகியோர் உயிரிழந்தனர்.

அதன் விசாரணை அறிக்கையில் கவனக் குறைவு ஏதும் நடக்கவில்லை, வரையறுக்கப்பட்ட பணி நடைமுறை பின்பற்றப்பட்டது ஆனால், வீரர்களிடையே ஒருங்கிணைப்பும்  புரிந்துணர்வும் இல்லாமல் போனது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஏரியின் நீர் மட்டம் நெஞ்சு வரை மட்டுமே இருந்ததாகவும் நீரின் ஓட்டம் அளவுக்கதிகமாக  இருந்ததால் வீரர்கள் திக்குமுக்காடிப் போயினர். ஆபத்து அவசர வேளையின்போது  மீட்புப் படையினரின் நடவடிக்கையில் கோளாறு ஏற்பட்டதால் அந்த உயிரிழப்பு தீடீர் சம்பவம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

அம்மாதிரியான சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கையும் பயிற்சியும் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker