Latestமலேசியா

நஜிப்பை கடத்தத் திட்டம் – மூவருக்கு 12 ஆண்டு வரை சிறை !

புத்ரா ஜெயா, ஏப். 15 – முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கையும் முன்னாள் அமைச்சர்களையும் கடத்த முயன்ற மூவருக்கு 8 லிருந்து 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்றிருந்த அலி சைபுடினுக்கு 12 ஆண்டுகளும்  மலேசியர்களான நோர் அஸ்மி ஜைலானி மற்றும் முகமட் யுஸ்ரி முகமட் யூசோப் ஆகியோருக்கு 8 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெர்னோன் ஓன் லாம் கியாட், ஸபிடின் முகமட் டியா மற்றும் ஹஸ் ஸானா மேஹாட் ஆகியோர் அடங்கிய அமர்வு  அவ்வழக்கை செவிமடுத்தது. அவர்களின் தண்டனை 2015 ஆண்டு ஏப்ரல் 5இல் அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 30லிருந்து ஏப்ரல் 6 வரை அலி(31), நோர் அஸ்மி(32) யுஸ்ரி(32) ஆகியோர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், ஐஎஸ் தீவிரவாதி ஒருவரின் மகனோடு அவர்கள் இணைந்து நஜிப், முன்னாள் துணை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேய்ன் மற்றும் முன்னாள் இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரைக் கடத்த அவர்கள் திட்டம் போட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker