Latestஉலகம்

நேர்த்திக் கடனின் போது விபரீதம்: தராசு கொக்கி தலையில் விழுந்து சசி தரூர் படுகாயம்

திருவனந்தபுரம், ஏப்.15- மத்திய முன்னாள் அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இன்று துலாபாரம் நேர்த்திக்கடன்  செலுத்திய போது தராசின் கொக்கி அறுந்து தலையில் விழுந்ததால் படுகாயமடைத்தார். நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை
சேர்ந்த இந்து மக்கள் விஷூ புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில் திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்  மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூர் இன்று திருவனந்தப்புரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை  செலுத்தி துலாபாரம் செலுத்த வந்திருந்தார்.

துலாபாரம் தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசிதரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது. எதிர்பாராத இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலை குலைந்து சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.

தலையில் இருந்து ரத்தம் வெளியேறியபடி காணப்பட்ட சசி தரூரை அவரது உறவினர்களும் காங்கிரஸ் கட்சியினரும் காரில் ஏற்றி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது தலையில்பட்ட காயத்திற்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மருத்துவர்கள் அவர் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டனர்.

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிதரூர் மூன்றாவது முறையாக இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker