Latestமலேசியா

மீனவர்கள் மாயம் – தேடும் நடவடிக்கை தொடர்கிறது

ஷா ஆலம், ஏப். 15 –  மேற்கு போர்ட் கிள்ளானிலிருந்து காணாமல் போன இரு மீனவர்களைத் தேடும் நடவடிக்கையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

போர்ட் கிள்ளாள், தஞ்சோங் மாகாங்கிலிருந்து  0.3 கடல் மைல் தூரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் காணாமல்  போனதாகத் தெரிவிக்கப்பட்டது.

முகமட் பைசோல் ரோமிலி (வயது 38), அவரின் சகோதரர் முகமட் பிர்டாவுஸ் ரோம்லி(வயது 25) மற்றும் நஸாருடின் என்பவரும் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

அவர்கள் காணாமல் போனதாக அன்று இரவு 9.40க்குப் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்களைத் தேடும் பணி இரவு 10.30க்குத் தொடக்கப்பட்டதாகக் கடல்துறை போலீசார் தெரிவித்தனர்.

அவர்களின் படகு பழுதாகி கடலில்  இருப்பதாகவும் தங்களைக் காப்பாற்றும் படி நண்பர் ஒருவருக்கு கைபேசி அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது அவர்கள் அங்கில்லை என தெரிகிறது.

அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து 5 கடல் மைல் தூரம் வரை  தேடும் பணி தொடர்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker