Latestமலேசியா

ரயில் மோதி இருவர் மரணம்!

கோலாலம்பூர், ஏப். 15 – சுங்கை பூலோவிலிருந்து கெப்பொங்கிற்குச் சென்று கொண்டிருந்த கேடிஎம் ரயிலில் மோதப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு நடந்ததாகவும்   அதில் 30 பயணிகள் இருந்ததாக கேடிஎம் அதிகாரி தெரிவித்தார்.

உயிரிழந்த அந்த இருவரும் மியன்மார் நாட்டவர்கள் என்றும் அவர்கள் ரயில் பாதையைக் கடக்க எத்தனித்த போது இச்சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த இருவரும் மோதப்பட்ட அவர்களின் உடல்கள் தண்டவாளத்திற்கு அருகில் கிடந்ததையும் பார்த்தவுடன் ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

மரணமடைந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோனைக்காக செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker