Latestசினிமா

விரக்தியில் தற்கொலை செய்து செத்திருப்பேன்: நகைச்சுவை நடிகர் மனோபாலா

சென்னை, ஏப்.15-  என் தோல்வியை ஜீரணிக்க முடியாமல், நான் எப்போதோ தற்கொலை செய்து செத்திருப்பேன் என நகைச்சுவை நடிகர்  மனோபாலா மனம் திறந்து தெரிவித்துள்ளார்.  தற்போது நகைச்சுவை பாத்திரத்தில் பல படங்களில் வெளுத்து வாங்கும் மனோபாலா, ஒரு காலத்தில் அவர் இயக்குனராகவும் இருந்து பின்னர் நடிப்பில் காலடி எடுத்து வைத்தவர்.

அவர் இயக்கிய முதல் படம் “ஆகாய கங்கை”. அந்தப் படம் படுதோல்வியடைந்ததால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு வருடங்கள் வீட்டில் தான் சும்மா இருந்தேன். மன விரக்தியில் சிலசமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட தோன்றியது.

அதன் பின் சென்னைக்கு கையில் வெறும் ஒன்னேகால் ரூபாயுடன் வந்தேன். ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை வாங்கி கையேந்தி பவனில் சாப்பிட்டு கொண்டிருந்த போது, தயாரிப்பாளர் கலைமணி வந்து எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறி கையில் ஐம்பது ரூபாய்
நோட்டை கொடுத்தார். அதன் பின் நான் இயக்கி வெற்றி பெற்ற படம் தான் “பிள்ளைநிலா”. தயாரிப்பாளர் கலைமணியை மட்டும்  சந்திக்காமல்இருந்திருந்தால் நான் நிச்சயம் தற்கொலை தான் செய்திருப்பேன் என மனோபாலா உருக்கமாக பேசியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker