Latestமலேசியா

ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் ஆலயத்திற்கு ரிம 50,000 பெருமானச் சேதம்!

குவாந்தான், ஏப். 15 – பாடாங் கெமுந்திங்கில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்ததால் ஆலயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மறுநாள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கத்துக்கு மாறான திசையில் இருந்து மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றது.

அதன் காரணமாக பாடாங் கெமுந்திங்கில் உள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் உணவுக் கூடம், திருமண மண்டபம் முதலியவை சேதமுற்றன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியும் உடைந்து தெறித்ததாக அவ்வாலயத்தின் தலைவர் டி.சுப்ரமணியம் தெரிவித்தார்.  மொத்த சேதம் 50,000 ரிங்கிட்டாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அங்கிருந்த பக்தர்கள் யாரும் காயமடையவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker