Latestமலேசியா

ஏழாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் மரணம்

கோலாலம்பூர், ஏப். 16 – கோத்தா டாமான்சாரா பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 7ஆவது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணமடைந்தான்.

நேற்று, ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு  வீட்டுக்குத் திரும்பிய தமது தந்தையாரிடம் தனக்கு தலை வலிப்பதாக அந்த 15 வயது சிறுவன் கூறியிருக்கிறான்.


அவனை சிறிது நேரம் ஓவ்வெடுத்துக் கொள்ளச் சொல்லிய தந்தை,  சிறிது நேரத்தில் ஏதொ பெரிய சத்தத்தை கேட்டிருக்கிறார். வீட்டில் தன் மகனை தேடிப் பார்த்த அவர் மகன் காணாமல் போனதை அறிந்து,  கீழே சென்று பார்க்கையில், தமது மகன் தலையில் கடுமையான காயத்தோடு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.

சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன் அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, அச்சிறுவனின் உடல் கீழ்தளத்தில் கிடப்பதைக் கொண்ட 18 விநாடி ஓடும் வீடியோ பதிவு வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker