Latestமலேசியா

காணாமல் போன நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

ஷா ஆலம், ஏப். 16 – போர்ட் கிள்ளானுக்கு அருகே படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, காணாமல் போன 4 மீனவர்களும் நேற்று மாலை 5.30 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சகோதரர்களான முகமட் பைசோல் ரோம்லி(வயது 38), முகமட் பிர்டாவுஸ்(வயது 25), நண்பர்கள் முகமட் அமிருல் அடில் கைரி(வயது 25) மற்றும் நஸாருடின் ஆகியோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தஞ்சோங் மாஹாங்கிலிருந்து 0.3 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிந்தபோது அவர்களின் ஃபைபர் படகு பழுதாகி கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

எனினும் நேற்று, திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு அங்கு வந்த மற்றொரு மீன்பிடி படகு அவர்களை புலாவ் கெத்தாம் ஜெட்டிக்கு அழைத்துச் சென்றதாகக்  கடல்துறை அமலாக்க ஏஜென்சியின் கேப்டன் முகமட் ரோஸ்லி காசிம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker