Latestஇந்தியா

கோபம் வருமா வராதா? ரஜினியை வறுத்தெடுத்த சீமான்!

சென்னை, ஏப்.16- இந்தியாவில் நதிநீர் இணைப்பு தொடர்பில் பாஜக தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதை ரஜினி ஆதரித்ததும் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.  இந்ந விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்கள் கூடி முடிவெடுப்பது போன்ற செயல். ஆறுகளை அதன் போக்கில் ஓடவிட்டு தேவையென்றால் அதனை பக்கத்தில் சேகரித்துக்  கொள்ளலாமே தவிர அதன் போக்கை திருப்பக்கூடாது.

உடலில் ரத்த நாளங்கள் போல பூமியின் நாளங்கள் ஆறுகள். அதனை இங்கு திருப்புவேன்- அங்கு திருப்புவேன் என்பதா? நடிகர் ரஜினி நதிகளை இணையுங்கள் என்கிறார். காவிரியோட எந்த நதியை இணைப்பார்கள்? அவரை சொல்ல சொல்லுங்கள். காவிரி இணைய மறுத்ததா?  தர மறுக்கிறான். 150 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பவனை இணைக்கலாம் என்றால் துண்டாக போய்விடமாட்டானா!

எங்களை அடித்து விரட்டிக் கொண்டிருப்பவனிடம் நதிகளை இணைக்கலாம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வானா? மக்களை ஏமாற்றும் வேலை இது. அப்போ கோபம் வருமா வராதா எத்தனை நாளைக்கு சகித்துக் கொள்வது!

ஒரு கோடி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கு கொடுத்தீர்கள். ஒரு கோடியை வைத்து ஒரு கிலோ மீட்டர் நதியை இணைத்து விடலாமா?  இதனை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் இப்படி பேசிக்கொண்டு அலையலாமா என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker