Latestமலேசியா

நஜிப், அருள் கந்தா – 1எம்டிபி வழக்கு நவம்பரில் விசாரணை !

கோலாலம்பூர், ஏப். 16 – 1எம்டிபியின் தணிக்கை அறிக்கையைத் திருத்தியதாக நஜீப் ரசாக் மற்றும் அருள்கந்தா கந்தசாமி மீதான வழக்கு நவம்பரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1எம்டிபியின் தணிக்கை  செய்யப்பட்ட உண்மையான அறிக்கையை பொது கணக்குக் குழுவில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அதில் திருத்தம் செய்ததாக  முன்னாள் பிரதமர் நஜிப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தம்மீது ஒழுங்கு மற்றும் சிவில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எடுக்காமலிருப்பதைத் தடுக்க அவர் அந்தக் குற்றங்களைப் புரிந்தார் என சொல்லப்பட்டது.

அந்தத் திருத்தங்களைச் செய்யத் தூண்டியதாக 1எம்டிபியின் அப்போதைய குழும செயல்முறை அதிகாரியான அருள் கந்தா கந்தசாமியின் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது.

அவ்விருவரின் வழக்குகளை ஒரு சேர விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி முமகட் ஸைனி மஸ்லான் ஏற்றுக் கொண்டு அந்த வழக்குகளை நவம்பர் 18 லிருந்து 29 வரையிலும் பின்னர் 2020ஆம் ஆண்டு ஜனவரி 13லிருந்து 17 வரை விசாரிக்கும் தேதியை அறிவித்தார்.

அருள் கந்தாவின் சார்பில் வழக்கறிஞர் என்.சிவநாதன் ஆஜராகும் வேளையில் நஜிப்பை டான்சிறீ முகமட் ஷாபி அப்துல்லா தற்காக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker