Latestஉலகம்

நீர்த்தொட்டியில் குழந்தை பிரசவிக்க தயாராகும் இளவரசி மேகன் !

லண்டன், ஏப். 16- பிரிட்டனில் இளவரசி மேகன் தண்ணீரில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக யோகா மற்றும் தியானம் செய்துகொள்ள  தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகிவுள்ளன.

பிரிட்டன் இளவரசர் ஹர்ரி தன்னுடைய நிறைமாத கர்ப்பிணி மேகனை  அழைத்துக்கொண்டு கென்சிங்டன் அரண்மனையிலிருந்து சமீபத்தில் வெளியேறினார். இருவரும் தற்போது வின்ட்சர் பகுதியில் அமைந்துள்ள பிரோமோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

இன்னும் சில வாரங்களில்  தம்பதியினருக்கு குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மருத்துவமனையில் மேகன் குழந்தை பெற்றுக்கொள்ள  திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து இன்று வரையிலும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.அதே சமயம் இளவரசர் வில்லியம், டயானா போன்று லிண்டோ விங் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் மேகன் குழந்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹோமியோபதி மருத்துவத்தை அதிகம் விரும்பும் மேகன் நீர்த்தொட்டியில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக யோகா மற்றும்  தியானப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என அவருக்கு நெருக்கமான ஒருவர், பத்திரிகை தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக ஒரு பெண் மருத்துவரை ஏற்பாடு செய்ய மேகன் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஹர்ரி- மேகன் தம்பதியினருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி -பெண்ணாக இருந்தாலும் சரி அது ஹர்ரியின் கண்களையும் மேகனின் தலைமுடியையும் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என பந்தயம் கட்டும் அமைப்பு ஒன்று பந்தயத்தையே நிறுத்தியுள்ளது. எனென்றால் பெரும்பாலானோர் ஹர்ரி – மேகனுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாகத் தான் இருக்கும் என்ற முடிவுக்கே வந்து விட்டதால் இந்த முடிவை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker