Latestஇந்தியா

மோடி திரைப்படம் பாருங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு !

புது டில்லி,ஏப்.16- பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை பார்த்து அறிக்கை வழங்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட்  நடிகர் , விவேக் ஓபராய் நடிப்பில் ஒழுங் குமார் இயக்கிய பி.எம். மோடி திரைப்படம் 11-இல் வெளியாக இருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ இது போன்ற படம் அல்லது கருத்தாக்கம் வழியே மறைமுகமாக விளம்பரம் தேடுவது தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் காரணம் தெரிவித்தது. இந்தத் தடையை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில்  நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி தேர்தல் ஆணையம்,மோடி திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல் டிரெய்லர் மட்டும் பார்த்து தடை விதித்து உள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்திற்கோ அல்லது அதன் குழுவுக்கோ திரைப்படத்தை பிரத்தியேகமாக திரையிடத் தயார் என்றார். இதையடுத்து தேர்தல் ஆணையம் மோடி திரைப்படத்தை பார்த்து, வரும் 19-க்குள் அதனை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட அமர்வு விசாரணையை 22 தேதிக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் தேர்தல் ஆணையத்திற்காக மோடி திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker