Latestமலேசியா

ஈப்போவில் அமைதி மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்!

ஈப்போ ஏப் 17 – துப்புரவு பணியை மேற்கொண்டு வரும் 7  தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்ட சலுகைகள் தங்களுக்கு வழங்காததால் இன்று இங்குள்ள மனிதவள இலாகா அலுவலகத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டனர் .

இந்த தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள்.

இங்கு அரசாங்க கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இ.பி.எப், முறையான விடுமுறை குறைந்த பட்ச சம்பளம் வெ.1100 வழங்கவில்லை . அவர்களுக்கு வெ. 950 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்த அவர்கள் இது குறித்த புகார்கள் கடந்த 8-1-2019 இல் மனிதவள இலாகாவில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

அது தொடர்பாக அந்த இலாகா அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  மனிதவள இலாகா முன்ப்றம் இந்த அமைதி மறியல் நடவடிக்கையில்  மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வருகை புரிந்த மனிதவள இலாகா அதிகாரிகள்  நிலவரங்களை கேட்டறிந்து உடனடியாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டது.

அந்த பேச்சுவார்த்தை இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் பி.எஸ்.எம். கட்சியின் பேச்சாளர் சரஸ்வதி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker