Latestமலேசியா

சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் – அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஏப்.17 – சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வு மேலும் தழைக்கும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பெர்ஹாலா சாலை, அசோக மண்டபத்தில் (விஸ்மா தர்ம சக்கரம்) இஸ்லாம் அல்லாத சமயத் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை முன்னிரவில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு விடை அளித்தபோது, பிரதமர் துறையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அவை யாவும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை ஆரம்பக் கல்வி, உயர்க்கல்வி நிலையம், வழிபாட்டுத் தளம் (நில சிக்கல்) குறித்த வினாக்களுக்கு நேரடியாக விளக்கம் சொல்ல முடியாத நிலையில் இருந்தாலும் கல்வி அமைச்சர், புறநகர் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்தபின் என்னால் விளக்கம் அளிக்க முடியும் என்றார்.

மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், பிரம்ம குமாரிகள் இயக்கம், வஜ்ராயன பௌத்த மன்றம், குருத்வாரா இயக்கம், அர்த்த ஞான இயக்கம், தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம், சத்ய சாய் பன்னாட்டு இயக்கம், தெய்வீக வாழ்க்கைச் சங்கம், மலேசிய பௌத்த சங்கம், இந்து சேவை சங்கம் உள்ளிட்ட சமய அமைப்புகள், மலேசியத் தமிழர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் முன்னதாக மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் தி.சத்தியபாமா நவீன பாட அமைப்பில் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பேசப்பட்ட ‘ஸ்டெம்’ என்னும் முறை (STEM = Science, Technlogy, Engineering and Mathe-matics), தற்பொழுது ‘ஸ்ட்ரீம்’ ஆக(STREAM = Science, Technlogy, Religion, Engineering, Arts and Mathamatics) என பெயர் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றியும் இதிலும்கூட ‘R’ என்பது  Religion-ஆகவும் Reading-ஆகவும் மாற்றி மாற்றி பொருள் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker