Latestமலேசியா

தப்பித்து ஓடும்போது, கொள்ளையனின் கார் கவிழ்ந்தது

மலாக்கா, ஏப். 17 –   கொள்ளையனை 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று, அவனது கார் கவிழ்ந்த பின்னர் போலீசார்  கைது செய்தனர்.

வீடமைப்புப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்ற அந்த ஆடவனை பற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து, தாமான் புக்கிட் கட்டில்  டாமாய் 11 எனும் பகுதிக்குச் சென்ற போலீஸ் ரோந்துக்கார் அவன் வீடொன்றின் சுவரின் ஏறியதைக் கண்டனர்

போலீசாரைக் கண்ட அவன், தனது  பெரோடுவா மைவி காரை எடுத்துக் கொண்டு, அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியேறி ஜாலான் துன் குடு பகுதிக்குச் சென்று யு-டர்ன் எடுத்து ஆயர் மோலேக் பகுதிக்கு விரைந்துள்ளான்.

ஆயினும், அங்கு மூன்று கார்களை மோதி அவனது கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. தங்காக்கைச் சேர்ந்த அவனுக்கு 6 போதைப்பொருள் குற்றங்கள் இருப்பதாகவும் சுன்கை ஊடாங் சிறையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்த பின்னர்,  மார்ச் 25ஆம் தேதி  அவன் விடுவிக்கபட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker