Latestமலேசியா

“தியானம் மற்றும் யோகா வழி புவியை சீர்படுத்துவோம் 2019” – நிகழ்ச்சிக்கு மலேசியர்கள் அழைக்கப்படுகிறார்கள்

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ஆம் திகதி உலக பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பூமித் தாய் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை  உணர்த்தவும் அதனை மாசு படுத்துவதால் உலகளாவிய நிலையிலும் மனித குலத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தி விழிப்புணச்சியை ஏற்படுத்தும்  நோக்கத்தில் மலேசிய பிராணிக் சிகிச்சை அறவாரியம் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

‘புவியை சீர்ப்படுத்துவோம் 2019-  தியானமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியும்’ எனும் தலைப்பிலான இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைப்பெறவுள்ளது.

நிகழ்ச்சி குறித்த விவரங்கள்:-

திகதி : 21 ஏப்ரல் 2019

இடம் : KL & Selangor Chinese Assembly Hall, Jalan Maharajalela, Kuala Lumpur

நேரம் :  காலை 10.00 – பிற்பகல் 1.00 மணி வரை

கடந்தாண்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 600 பேர் பங்கேற்றனர் எனவும்  இவ்வாண்டு குறைந்து 1,000 பேர் பங்கேற்பார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டுக் குழுவான மலேசிய பிராணிக் சிகிச்சை அறக்கட்டளை தெரிவித்தது.

உலக அமைதியை யோகா மற்றும் தியானம் மூலம் செயல்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் தங்களை தொடர்புக் கொள்ளலாம் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைப்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள கட்டணமாக ரிம 10 வசூலிக்கப்படுகின்றது. இக்கட்டணம் பங்கேற்பாளர்களுகான உணவு மற்றும் பானங்களை ஏற்பாடு செய்ய பயன்படுத்தப்படும்.

தொடர்புக்கு  012-974 2028 / 03-7887 1028 என்ற எண்களை அழைக்கவும்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker