Latestமலேசியா

பேறு குறைந்த திருடனுக்கு மூன்றாண்டு சிறை

ஈப்போ, ஏப். 17 –  வீடு புகுந்து 10,000 ரிங்கிட் பெறுமான பொருள்களைத் திருடிய மாற்றுத் திறனாளி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விபத்து ஒன்றில் வலது கால் முடமான கைருல் அம்ரி உலுல் அஸ்மி(வயது 33)என்பவர் பாரிட், கம்போங் தெலோக் மானிஸ் லாயாங் லாயாங் கீரி எனும் வீடொன்றில் மார்ச் 24இல் காலை 3 மணியளவில் புகுந்து உண்டியல் பணம், ஒரு கைக்கடிகாரம், 3 கழுத்து தங்கச் சங்கிலிகள், 3 கை தங்கச் சங்கிலிகள், 3 தங்க மோதிரங்கள், ஒரு கைப்பேசி முதலியவற்றைத் திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் கைருல் அம்ரி அக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வேளையில்,  நீதிபதி அஸ்மான் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை  விதித்ததோடு,  அவரது தண்டனைக் காலம் கைது செய்யப்பட்ட ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து  அமலுக்கு வரும் என அறிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker