Latestமலேசியா

போலிஸ்காரர்களுக்கான வாகன பெட்ரோல் அட்டை முறைகேடு – போலீஸ்காரருக்குச் சிறை

மலாக்கா, ஏப். 17 –  போலீஸ் துறையின் பெட்ரோலுக்கானஅட்டையை 7 முறை, முறைகேடாகப் பயன்படுத்தி 92,000 ரிங்கிட்டை எண்ணெய் நிலையத்திலிருந்து பெற்ற போலீஸ்காரர் ஒருவருக்கு 4 ஆண்டு 7 மாதச் சிறை தண்டனை விதிக்கபட்டது.

அந்த குற்றங்களை ஒப்புக் கொண்ட முகமட் நுர் பாடெர்ஷா மத்தாசுவுக்கு (வயது 34) ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு பிரம்படியும் 8,000 லிருந்து 18,000 ரிங்கிட் அபராதமும்,  அதனை செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு மாத சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

எனினும் அத்தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டதால், அவர் 8 மாதங்கள் மட்டுமே சிறையில் இருக்க வேண்டும்.

பாடெர்ஷா அக்குற்றங்களை அலோர்காஜா கெலாமாக் பெட்ரோனாஸ் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு மார்ச் 1லிருந்து செப்டம்பர் 30 வரை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தீர்ப்பளிப்பதற்கு முன்னர், பாடெர்ஷா சரவாக்கில் உள்ள தமது தாயாரின் மருத்துவத்திற்காக 60,000 ரிங்கிட்டை செலவிட்டதாகவும் தாம் 5 பிள்ளைகளோடு நோயுற்றிருக்கும் தந்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதாலும் தமக்கு கருணை காட்டக் கோரினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker