Latestமலேசியா

மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு நியாயமே இல்லாத முடிவு – வி. கணபதிராவ்

கோலாலம்பூர், ஏப். 17 – இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற பல மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்படாததை சுட்டிக்காட்டி, அது அரசின் மீதான வெறுப்பை அதிகரிக்கும் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எச்சரிக்கை விடுத்தார்.

ஐநாவின் சிறார் உரிமை மாநாட்டு ஒப்பந்தத்தின் விதி 28இன் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் கல்விக்கான உரிமை தரப்பட வேண்டும், அதில் எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டுக்காட்டிய கணபதிராவ், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் கல்விக்கான உரிமையை பக்காத்தான் அரசு அளிக்க கடமைப் பட்டுள்ளதாக அறிவுறுத்தினார்.

எனினும், இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் 9ஏ, 8ஏ மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதில் எம்மாதிரியான  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை அரசு விளக்க வேண்டும்.

விண்ணப்பப் பாரங்கள் எந்த அடிப்படையில்  பரிசீலிக்கப்பட்டன என்பதுவும் விளக்கப்பட வேண்டும். இந்தப் பாகுபாடு அரசுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் என்றும் என அவர் எச்சரித்தார்.

பி40 தர மாணவர்களுக்கும் புறப்பாட நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகச்  சொல்லப்படும் சாக்குப்போக்கு ஏற்றுக் கொள்வதற்கில்லை.

எனவே, மெட்ரிகுலேஷன் கல்விக்கு, கல்வியின் தரம், இன விகிதாச்சார அடிப்படை போன்ற புள்ளி விவரங்களை அரசு வெளிப்படையான முறையில் வெளிப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அந்தப் புள்ளி விவரங்கள் யாவும் ரகசியம் இல்லை என்பதால் அதனை பொதுமக்களின் பார்வைக்கு உடனடியாக வைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker