Latestமலேசியா

வாங் கிளியான் அரச விசாரணை ஆணையம் தொடங்கியது

புத்ரா ஜெயா, ஏப். 17 –  2015ஆம் ஆண்டு பெர்லிஸ் வாங் கிளியானில் ஆள்கடத்தல் மற்றும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதை ஆராயும் அரச விசாரணை ஆணையம் இன்று புத்ரா ஜெயா உள்துறை அமைச்சின் கட்டடத்தில் நடந்தது.

இன்று சாட்சியமளித்த போலீஸ் காப்பரல் மாட் டென் தாம் சார்ஜன்ட் யூசோப் இஸ்லாமுடம் ரோந்துப் பணியில் இருந்தபோது சந்தித்த அனுபவத்தைத் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி தாங்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓர் ஓடைக்கு இட்டுச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றபோது, பெண் ஒருவர் ஓடையில் துணி துவைத்துக் கொண்டிருந்ததாகவும், நபர் ஒருவர் அருகில் இருந்த இரு மரங்களுக்கிடையே தொட்டில் கட்டி அதில் படுத்திருப்பதையும் கண்டனர்.

அங்கு கட்டைகளால் ஏற்படுத்தப்பட்ட பாதையும் நான்கு மூலையில் பாதுகாப்புக் காவல் முகப்புகளையும் கண்டதாகத் தெரிவித்தார்.

போலீஸ் சாவடிக்குச் சென்று, மேலதிகாரியிடம் அது பற்றித் தெரிவித்த பின்னர், மறுநாள் 10 பேருடன் அந்த இடத்துக்குச் சென்றனர்.

அங்கு சென்றபோது கைப்பேசியில் செய்தி வரும் சத்தத்தைக் கேட்டனர்.  அதனைக் கவனித்த ஒரு பெண்மணி, போலீஸ்! போலீஸ்! என கத்திக் கொண்டு ஓட,  அங்கிருந்த மற்றவர்களும்  காட்டுக்குள் விரைந்து ஓடி மறைந்தனர் என் மாட் தெரிவித்தார்.

அந்த இடத்தைச் சோதனையிட்டபோது, 6 வெளிநாட்டவர் கைதிகளாக வைக்கப் பட்டிருந்தனர். பின்னர் அவர்களைக் கைது செய்து,   போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker