Latestமலேசியா

இரண்டாயிரம் ஏக்கர் நில விவகாரம் சட்டமன்றத்தில் சிவசுப்பிரமணியம் கேள்வி

ஈப்போ ஏப் 18-பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கும் இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலவிகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தது.

அந்த நிலத்தில் செம்பனை பயிர் செய்யப்பட்டு விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது அதன் வழி இந்திய மாணவர்களுக்கு எந்த வகையில் நன்மை கிடைத்துள்ளது குறித்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ. சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார் .

இந்த நில விவகாரம் தொடர்ந்து பலருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதால் அதற்கு மாநில மந்திரி புசார் தீர்வுக்காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இங்கு நடைபெற்று வரும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

இதில் புந்தோங்கில் கால் நடைகளை வளர்த்து வரும் நபர்களுக்கு இட ஒதுக்கீட்டை செய்யவேண்டும்.

புந்தோங்கில் உள்ள அரசாங்க மருத்துவ மனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு தாதியர்கள் பற்றாக் குறை நிலவுவது குறித்தும் அரசு கவனத்திற்கு கொண்டு வந்தார் .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker