Latestமலேசியா

சீன, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வந்தேறிகளா? – கைரி சாடல்

கோலாலம்பூர், ஏப். 18 – சீன, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வந்தேறிகள் என கெமாயான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முகமட் பாட்லி ஓஸ்மான் விமர்சித்துள்ளது வெட்கக் கேடானது என கைரி ஜமாலுடின் சாடியுள்ளார்.

அது கட்சியின் கருத்து இல்லையென்றும் அது முகமட் பாட்லியின் சொந்தக் கருத்து என அம்னோவின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ அனுவார் மூசா குறிப்பிட்டது மீதும்  கைரி தமது அதிருப்தியைத் தெரிவித்தார்.

அம்னோ பிரதிநிதிகள் அவ்வாறு கூறுவது கூட தவறுதான் என்றும் குறைந்தது அவரை கட்சி எச்சரிக்க வேண்டுமெனவும் அவர் வலியறுத்தினார்.

ஒருவர் செய்யும் தவறு கட்சியைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனிடையே மசீசவின் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக்கோல் வோங், தேசிய முன்னணி இழந்த மக்களின் ஆதரவை மீண்டும் பெற சிரமத்தை எதிர்நோக்கும் என குறிப்பிட்டார்.

பாட்லி அதற்காக வருத்தத்தைத் தெரிவித்து மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டுமென  அவர் வலியுறுத்தினார்.

பாட்லி செவ்வாய்க்கிழமை கூடிய பகாங் சட்டமன்ற கூட்டத்தில், சீன, தமிழ்ப்பள்ளி மாணவர்களை வெளிநாட்டவர்கள் என குறிப்பிட்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker