Latestசினிமா

நடிகை கங்கனா மீது செருப்பு வீசிய பிரபல தயாரிப்பாளர்!

மும்பை, ஏப்.18- பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் நடித்த “மணிகர்ணிகா” படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப்படம் வெளியாவதற்கு முன்பும் சரி, வெளியான பின்பும் சரி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கங்கனா ரனவத். குறிப்பாக அவரது சர்ச்சைகளுக்கு கங்கனாவை விட அவரது சகோதரி ரங்கோலி தான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். தற்போது பிரபல சீனியர் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் குறித்து அவரது மனைவி சோனியிடம் டுவிட்டரில் தொடர்ந்து வாக்குவாதங்களுடன் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் ரங்கோலி.

அதில் அவர் கூறியதாவது:- எனது சகோதரி கங்கனா மீது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கடுமை காட்டி வருகிறீர்கள். அவதூறுக்கு மேல் அவதூறாக பரப்பி வருகிறீர்கள். 2006 இல் மகேஷ் பட் தயாரிப்பில் ஓஹ் லாம்ஹோ என்கிற படத்தில் நடித்து முடித்த போது, தான் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் பெண் தற்கொலைப் போராளியாக நடிப்பதற்கு அழைப்பு விடுத்தார் மகேஷ் பட்.

ஆனால் அதில் விருப்பமில்லை என கூறி நிராகரித்தார் கங்கனா. அதற்கான தனது அலுவலகத்திற்கு வந்த கங்கனாவை மிகக் கடுமையாக சத்தம் போட்டார் மகேஷ் பட். அது மட்டுமா கங்கனா கதாநாயகியாக நடித்த ஓஹ் லாம்ஹோ படத்தின் பிரிவியூ காட்சியை பார்ப்பதற்கு கங்கனா வந்த போது அந்தப்படத்தை பார்க்க விடாமல் தடுத்து அவர் மீது செருப்பை தூக்கி வீசினார் மகேஷ்பட்.

அன்றைய தினம் இரவு முழுவதும் கங்கனா குமுறி குமுறி அழுதது எல்லாம் மறக்கக் கூடிய ஒன்றா..! இத்தனைக்கும் அப்போது அவர் வெறும் 19 வயது பெண் என காட்டமாக பதிவிட்டு உள்ளார் கங்கனாவின் சகோதரி ரங்கோலி  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker