Latestமலேசியா

பேராக் மந்திரி பெசாரைத் தாக்கிய ஒலிப்பதிவு – பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈப்போ, ஏப். 18 – பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவை தாக்கிப் பேசும் ஒலிப்பதிவு வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு நிமிட ஆடியோவில் அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் பேராக் மந்திரி பெசார் அகமட் சைசால் மாநிலத்தை நிர்வகிக்கும் முறையைச் சாடியுள்ளார்.

மந்திரி பெசார் எப்போதும் கூட்டங்களுக்கு நேரம் கழித்து வருவதாகவும், பேராக் சுல்தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மந்திரி பெசாரை அகற்ற பல ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தம்மை வந்து சந்தித்து பேசியிருப்பதாகவும், அடுத்த மந்திரி பெசாராக ஆவதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஒலிப்பதிவு குறித்து, ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் அப்துல் அஸிஸ் பாரியிடம் கேட்டபோது, அதில் பேசியது தாம் இல்லையென்றும் தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker