Latestமலேசியா

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனரின் கார் திருட்டு !

காஜாங், ஏப்ரம் 18 – போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் பயன்படுத்தி வந்த காவல் துறைக்குச் சொந்தமான தொயாட்டா வெல்வையர் வகை கார் திருடுப் போனது. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் காஜாங் சுங்கை ரமாலில் உள்ள ஓர் உணவகம் அருகே நடந்துள்ளது.

31 வயதான அந்த போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் இரவு உணவை சாப்பிட்டப்பிறகு வந்து பார்த்தப் போது கார் காணாமல் போயிருந்ததாக கூறப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் நோர் அஷாம் ஜமாலுடின் தெரிவித்தார்.

காரை கழுவிவிட்டு, நெகிரி செம்பிலானுக்குச் செல்லும் வழியில், இரவு உணவை எடுத்து விடலாம் என முடிவு செய்து சுமார் 7 மணியளவில் உணவகம் ஒன்றின் அருகே காரை நிறுத்தியுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்துப் பார்த்தப்போது கார் அங்கே இல்லை என தெரிவிக்கப்பட்டதாக நோர் அஷாம் மேலும் கூறினார்.

இத்திருட்டுச் சம்பவத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த அந்த போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனரின் பணப்பை, போலிஸ் அடையாள அட்டை மற்றும் அவருக்குச் சொந்தமான இதர பொருட்கள் சிலவற்றும் திருடப்பட்டுள்ளன.   காரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker