Latestஇந்தியா

மூடப்பட்டது ஜெட் ஏர்வேஸ்! விஜய் மல்லையா அனுதாபம்

புதுடில்லி, ஏப்.18- வங்கிகள் அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நேற்றுடன் ஏப் 17 தற்காலிகமாக முடிவுக்கு வந்து விட்டது. இந்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார்.

இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து 75 சதவீத பங்குளை விற்க வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்தது. அது பலனளிக்கவில்லை. அதனால் இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை. குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள் பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்று கொண்டன.

இதனால் 2018 டிசம்பரில் 123 ஆக இருந்து விமானங்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக குறைந்து விட்டது. உடனடியாக 400 கோடி நிதிவுதவி அளித்தால் சேவையை தொடரலாம் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால் மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன. இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இதனிடையே இது குறித்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :-கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை இந்திய அரசு 35 ஆயிரம் கோடி கொடுத்து உதவி கரம் நீட்டியது. ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு இவ்வாறு வஞ்சனை செய்கிறது. பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி செயல்படத்தான் வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker