Latestமலேசியா

வாங் கிளியான் புகைப்படங்களை அழிக்க உத்தரவு

புத்ரா ஜெயா, ஏப். 17 – வாங் கிளியான் ஆள் கடத்தல் மற்றும் புதை குழிகள் சம்பந்தமான அனைத்து புகைப்படங்களையும் அழிக்கும்படி மேலதிகாரி உத்தரவிட்டதாக அந்த அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்த துணை சூப்ரிடெண்டன் எம். எம் ஏ ஜொயிக்கிங்  தெரிவித்தார்.

சொந்தமாக வைத்திருக்கும் அதன் படங்களையும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட படங்களையும் அழிக்கும்படி தமது மேலதிகாரியான சூப்ரிடெண்டன் வான் ஹம்சா வான் காடிர் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார். அவருக்கு பெர்லிஸ் துணை போலீஸ் தலைவர் உத்தரவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், வாங் கிளியான் முகாம் அதே ஆண்டு ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் அழிக்கப்பட்ட பின்னரே, அந்தப் படங்களை அழிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்,

வாங் கிளியானில் மியன்மார் மக்களை மலேசியாவுக்குக் கடத்தி வரும் வழியில், அவர்கள் அதற்கான கட்டணத்தைக் கொடுக்கத் தவறியதால், பலர் கொல்லப்பட்டு வாங் கிளியான் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டனர். அது பற்றிய அரச விசாரணை தற்போது புத்ரா ஜெயாவில் நடைபெற்று வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker